சிறப்பம்சங்கள்


ஸ்ரீ நெல்லுக்குப்பம்மன் அருளால்


நெல்லூரில் நெல்லுக்குப்பம்மன் கோயிலில் நடைபெற்ற சப்தரிஷிகள் யாகத்தின் பலன்கள்:

 1. வரதந்து மஹரிஷி உருவ படம் கிடைத்தது.

 2. மழை இல்லாமல் வரண்டு கிடந்த காலத்தில் மழை மிக அதிகமாக பெய்ய ஆரம்பித்து பசுமை படர்ந்தது.

 3. யாக குண்டத்திலிருந்து அந்த தாயே எழுந்து வலது கால் முன்வைத்து கை வீசி நடப்பதுபோல் யாகக்கினியானது புகைபடத்தில் பதிவாகியுள்ளது.

 4. புதிய மந்திரங்கள் கிடைத்தன.

 5. அந்த யாகத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் வேண்டியது கிடைத்தது.

 6. சப்தரிஷிகள் ஆஸ்ரமம் அமைக்க 15 ஏக்கர் நிலம் வாங்கவும் அதன் மேன்பாட்டிற்க்கும் ஸ்ரீ நெல்லுக்குப்பம்மன் அருளாசி கிடைத்தது.

 

அருள்மிகு நெல்லுக்குப்பம்மனுடைய சக்தி லீலைகள்

 1. செயலர் ராஜுவை திருக்கோவில் கட்ட பணித்தது.
 1. உதவி செயலர் திரு.கிருஷ்ணன் வசம் கனவில் திருக்கோவில் அமைப்பை அவ்வப்போது சொல்லி கட்டவைத்தது.
 1. சின்னவதம்பச்சேரி திருப்பூர் ஸ்ரீ பத்மா டெக்ஸ் S.P. நாச்சிமுத்து செட்டியார்  N.மாரம்மாள் , ஒரே மனதாக தங்களுக்கு சேர்ந்த சின்னவதம்பச்சேரியின் மையத்தில், சமமாகவும் வடக்கு முகமாகவும் அமைந்த சுமார் 33 செண்ட் நிலத்தினை திருக்கோவில் கட்ட உபயமாக கொடுத்துள்ளார்கள்.
 1. கும்பாபிஷேகத்தை சிறப்பாக நடத்திவைத்து தொடர்ந்து பூஜைகள், பஜனைகள், அன்னதானங்கள், திருமணங்கள், குழந்தை பேரு இல்லாதவர்களுக்கு குழந்தைவரம் கொடுப்பது வரம்வேண்டி வரும் மாணவ, மாணவிகளுக்கு கல்வியில் தரம் உயர அருள் வழங்குவது, மனகஷ்டத்துடன் வருபவர்களுக்கு கஷ்டங்களை போக்குவது, வியாபாரிகளுக்கு தொழில் வளத்தை தருவது, விவசாயிகளுக்கு வேண்டியவரை மழை பொழிய வைத்து வளமாக வைப்பது, நோயுற்றுள்ளவர்களின் நோய்தீர்த்து காப்பது, நெசவாளிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் வேண்டிய அளவு தொழில்வளத்தை கொடுப்பது மற்றும் வரம் வேண்டிவரும் நல்லவர்களுக்கு வேண்டிய நல்ல வரங்களை வாரி வழங்குவது என அந்த தாயின் அருள் லீலை தொடர்கின்றது.
 1. பொள்ளாச்சி அருகில் ஜலத்தார் எனும் ஊரில் காமாட்சியம்மனை குலதெய்வமாக வழிபட்டு வந்த மானூர்பாளையம் மடமனைமயை சார்ந்த மாலிலார் குல மக்கள் அன்னை காமாட்சிக்கு திருகோவில் ஒன்று 15 வருடங்களுக்கு முன்பு கட்டி வழிபட்டு வந்தனர் அந்த திருக்கோவிலின் மூலஸ்தானமானது தேவதானபட்டி (தேனிமாவட்டம்) எனும் ஊரில் பெரிய கோவிலாக உள்ளது. அங்கே கருவறை மூடப்பட்டுதான் (பல நூறு வருடங்களுக்கு முன்பு மூடப்பட்டது) இருக்கும் கருவறையில் உருவ வழிபாடு இல்லை கதவு முன்பு ஐந்துதலை நாகம் சூலம் தான் இருக்கும் அவைகளுக்குதான் அனைத்து பூஜைகளும் நடந்துவருகிறது ஆனால் ஜலத்தூரில் இதுபோல இல்லாமல் காமாட்சியம்மன் சிலை வைத்து வழிபட்டு வந்தனர் நெல்லுக்குப்பம்மன் அருள் வாக்கு மூலம் அந்த திருக்கோவில் பழைய கட்டிடம் இடிக்கப்பட்டு மிக அற்புதமாக கற்கோவிலும் விமானமும் திருப்பூர் Er.S.வீரராகவன் அவர்களின் முழு ஒத்துழைப்பும் பொருளுதவியும் செய்ய மாலிலார் சகோதரரர்களும் பொருளுதவி செய்ய திருக்கோவில் துரிதமாக கட்டப்பட்டு கும்பாபிஷேகம் மிக சிறப்பாக செய்யப்பட்டு அனுதின பூஜைகள் செவ்வனே நடந்து வருகிறது.
 1. திருப்பூரைச் சேர்ந்த தொழில் அதிபர் திரு.சந்துரு தேவகி தம்பதியருக்கு 18 வருடங்களாக குழந்தை பாக்கியம் இல்லை பார்க்காத மருத்துவரில்லை போகாத கோவில் இல்லை எந்த பலனும் இல்லை இறுதிமுயற்சியாக அருள்மிகு நெல்லுக்குப்பம்மன் பாதத்தை சரணடைந்து வேண்டினர். அவர்கள் வேண்டுதலுக்கு மனமிறங்கி அருள்மிகு நெல்லுக்குப்பம்மன் அவர்களுக்கு அருள் வாக்கில் சொல்லி சொல்லியபடி பெண் குழந்தை பிறந்தது அஸ்விகா என பெயரிட்டு நெல்லுக்குப்பம்மன் கோவிலுக்கு வந்து நன்றி செலுத்தினார்.
 1. அருள்மிகு நெல்லுக்குப்பம்மன் திருக்கோவில் உருவான பிறகு சின்னவதம்பச்சேரி சொக்கஞ்செட்டியார் மல்லயம்மாள் ஹையர் செகண்டரி பள்ளியில் படித்த மாணவன் ஆனந்தன் என்பவர் IAS தேர்வு எழுதி அன்னை அருளால் தேர்வாகி IAS அதிகாரியாகி உள்ளார்.
 1. கணபதிபாளையத்தை சார்ந்த திரு.கோவிந்தராஜ் அவர்கள் மகன் நெல்லுக்குப்பம்மனை வேண்டி படித்து இஞ்ஜினியரிங் பாஸ் செய்து பெங்களூரில் விப்ரோ கம்பெனியில் நல்லபதவியில் உள்ளார்.
 1. தாராபுரம் To பழனி வழியில் உள்ள தேர்பட்டி என்னும் ஊரை சேர்ந்த நெசவு தொழில் செய்து வரும் தம்பதியர்க்கு பிறந்த திரு.ரமேஷ் என்கிற சகோதரர் M.B.B.S படித்து சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் பணிபுரிந்து கொண்டே மேல் படிப்பு படித்து பரீட்சை எழுதி தேர்வாகாமல் சோர்ந்து இருந்த வேளை அன்றை இரவு அருள்மிகு நெல்லுக்குப்பம்மன் அவர் கனவில் சென்று தான் சின்னவதம் பச்சேரியிலிருந்து வந்திருப்பதாகவும் என் ஆலயத்திற்கு வா உன் குறை தீரும் எனவும் சொல்லியுள்ளாள் அந்த கனவில் நடந்த விசயத்தை அடுத்த நாள் காலை டாக்டர் ரமேஷ் அவர்கள் தேர்பட்டியிலுள்ள தனது தாயாருக்கு தொலைபேசியில் சொல்லியுள்ளார்கள் அதனை கேட்ட அந்த தாயின் அன்றைய இரவு கனவில் அன்னை நெல்லுக்குப்பம்மா பிரத்தியட்சமாக தன் சிலா வடிவத்தையும் தனது ஆலய வடிவத்தையும் ஆலையம் முன்பு உள்ள புற்றினையும் அருட்காட்சியாக காட்ட அந்த டாக்டர் ரமேஷ் தாயார் சின்னவதம்பச்சேரிககு நேரில்வந்து மேற்கண்ட விசயத்தையும் சொன்னார்கள் பிறகு கனவில் கண்ட நெல்லுக்குப்பம்மனையும் கோவிலையும் புற்றையும் பார்த்து அதியத்து அன்னை ஸ்ரீ நெல்லுக்குப்பம்மனை வழிபட்டு சென்றார்கள்.
 1. தனது குல தெய்வமே யார்? எங்கே உள்ளார் என தேடிவந்த குன்னூரில் சௌவுண்டம்மன் திருக்கோவிலில் பலவருடங்கள் பூசாரியாக பணியாற்றி வந்த திரு.சுப்பிரமணி என்பவருக்கும் அன்னை நெல்லுக்குப்பம்மனே குன்னூர் சவுண்டம்மன் ஆலயத்திற்க்கு தரிசனத்திற்கு வந்த ஓர் தாயின் மூலம் அருள் வாக்கில் சொல்லி திரு.சுப்பிரமணி அவர்கள் சின்னவதம்பச்சேரியை தேடிவந்து பொங்கலிட்டு பூஜைகள் செய்து சென்றுள்ளார்.
 1. அன்னை ஆலயத்தில் உயரத்தில் கம்பீரமாக அமர்ந்து இருப்பது அந்த வழியாக செல்பவர்கள் தூரத்தில் இருந்தே தரிசனம் செய்ய சவுகரியமாக இருக்கின்றது எனவே அந்த வழியாக செல்லும் வாகனங்களாகட்டும், பாதசாரிகளாகட்டும் சாதி மதம் பாராமல் வணங்கி செல்கின்றனர்.
 1. எங்களை காசி அழைத்துச் சென்று பலரிஷிகளை, முனிவர்களை, தெய்வங்களை காண வைத்து கங்கை நதியில் மத்தியில் நான்கு யாகம் செய்ய வைத்தாள்.
 1. இமயமலைக்கு அழைத்துச் சென்று பனியில் நடக்கவைத்து ஆகாச தீர்த்தங்களையும் கங்கை (1200) தீர்த்தங்களையும் எமக்கு கிடைக்க வைத்தாள்.
 1. பல தீர்த்தங்களை சேகரிக்கும் எண்ணத்தை கொடுத்தும் அதனை பல கும்பாபிஷேங்களுக்கும் பல ஷேத்திரங்களுக்கும் கொடுக்கவைத்தாள்.
 1. பொன்னுச்சாமி தாத்தா என்ற மகானை (சித்திரை) என் கையுடன் இணைத்தாள்.
 1. உங்களை போன்ற லட்சோ லட்சம் அன்பு உள்ளங்களை எனக்கு உறவாக்கினாள்.

  பிரதி வாரம் செவ்வாய்கிழமை அருள்வாக்கு நடைபெறும் மேலும் படிக்கWay