ஸ்ரீ நெல்லுக்குப்பம்மன் லீலைகள்


  1. அம்மா கும்பாபிஷேகத்திற்கு முன்பு திருக்கோவிலுக்கு ஒரு காராம் பசு வரும் என கூறினார்கள்

  2. கும்பாபிஷேகத்தன்று அருள்வாக்கு தருவேன், அந்த அருள்வாக்கு பலிக்கும் அருள்வாக்கு இந்த திருக்கோவிலை பொருத்த வரையில் நிரந்தரமானது என கூறினாள்

  3. கும்பாபிஷேகத்தன்று மழைவரும் என கூறினாள்

  4. திருக்கோவில் வலது புறத்தில் கவுளியாக இருப்பேன் என்றார்

கும்பாபிஷேகத்திற்கு ஒருவாரம் முன்பாக பொள்ளாச்சி அருகில் ஒரு கிராமத்தில் ஒருவர் கனவில் சொல்லி அவர்தம் வீட்டு காராம் பசு ஈன்ற கன்றை சின்னவதம்பச்சேரி அருள்மிகு நெல்லுக்குப்பம்மன் திருக்கோவிலுக்கு அழைத்து வந்து கோவில் முன்பாக நிறுத்தி மஞ்சள் நீர் தெளித்து விட்டவுடன் கும்பாபிஷேகத்திற்கு முன்பு கருவறை அர்த்த மணடபம் கட்டப்பட்டு கருவறையில் அம்மன் அமரும் பீடம் மட்டும் உள்ளது. அம்மன் சிலை வடிவாக ஜலவாசம் (48 நாட்கள்) இருந்து வந்தாள் அந்த சமயம் சுமார் இருநூறு அடி தூரத்தில் உள்ள திருக்கோவிலை நோக்கி அந்த காராம் பசு நடந்து சென்று கருவறைக்குள்ளேயே சென்று கோமயம் தெளித்து அம்மன் அமரும் பீடம் தன்னை தன் நாக்கால் சுத்தம் செய்து பிறகு வெளியில் வந்து நின்றது ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.

கும்பாபிஷேகத்தை கணக்கம்பாளையம் கேசவ சாஸ்திரிகள் தலைமையில் 14 சாஸ்திரிமார்கள் ஒன்று சேர்ந்து மிக அற்புதமாக நடத்தினார்கள் 24.04.2002 சித்திரை 12-ம் நாள் கும்பாபிஷேக நாள் அன்றைய தினம் கேசவ சாஸ்திரிகள் கும்ப கலசங்களில் 4 நாள் யாகங்கள் மூலம் சக்தியேற்றி அந்த கலசங்களை ஸ்ரீ பாலவிநாயகர், ஸ்ரீ ராமலிங்கர், மூலஸ்தான தேவதை கப்பேலார் குல தெய்வம் அருள்மிகு நெல்லுக்குப்பம்மன், பாலமுருகன், கன்னிமார், பரிவார கோஷ்ட தெய்வங்கள் சாமுண்டி, தூர்க்கா, பிராமஹி, வைஷ்ணவி, மகேஷ்வரி மற்றும் காவல் தெய்வம் கருப்பராயன் புற்று, கோபுரம் என கொண்டு சேர்த்து சித்திரபானு வருடம் 12-ம் தேதி (25.04.2002) வியாழக்கிழமை சுக்லபட்சம் திரயோதசி திதியும், ஹஸ்த நட்சத்திரமும், சித்தயோகமும், சுக்ரஹோரையும் கூடிய சுபயோக சுபவேளையில் அன்று காலை 8 மணிக்கு மேல் 9.40க்குள் மிதுன லக்னத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் செய்து வைத்துள்ளார்கள்.

அருள்மிகு ஸ்ரீநெல்லுக்குப்பம்மன் திருக்கோவிலின் கோபுரங்களில் உள்ள மூன்று கலசங்களுக்கும் கும்பாபிஷேகம் செய்த பிறகு கேசவ சாஸ்திரி அவர்கள் பிரதான கலசத்தை ஏந்திக் கொண்டு கருவறைக்குள் சென்றார் அதுசமயம் தலைவராக இருந்த திரு.பத்மா சவுடப்பன் அவர்களும் செயலாளர் அவர்களும் கருவறைக்குள் சென்றார் கருவறைக்குள் உடனிருந்தனர். அப்போது கேசவ சாஸ்திரி அவர்களுக்கு அந்த அன்னையே உடலில் புகுந்து ஹா, ஹா, ஹா, ஹா,ஹா என ஏகாந்தமாக சிரித்து அருள்வாக்கு பேச ஆரம்பித்தார். அது சமயம் சாஸ்திரியவர்கள் நினைவிழந்து சரிந்தார்கள் செயலாளராகிய ராஜு அந்த பிரதான கலசத்தை தாங்கி பிடித்து அந்த தாய் நெல்லுக்குப்பம்மன் மேலே தலைவருடன் சேர்ந்து கும்ப அபிஷேகம் செய்தார்கள். அங்கேயே தாயின் அருள்வாக்கு கேசவசாஸ்திரி வாயிலாக வந்தது. அப்பா, நான் இங்கே ஆனந்தமாக வந்து குடிகொண்டுள்ளேன், இனி என்னை நாடிவரும் மக்களின் குறைதீர்ப்பேன், அனைத்து மக்களும் வளமுடன், நலமுடன் வாழ அருள் வழங்குவேன் என்றார் அந்த தாயானவள் பெண்மக்கள் சாபம் தீர்ந்தது என்றாள்.

 

அந்த தாயானவள் தலைவர் சவுடப்பன், அவர்களையும் செயலாளர் ராஜுவையும் அழைத்து இருவர் கையில் கைநிறைய பூவை அள்ளி கொடுத்து கருவறைக்குள் கும்பாபிஷேகமாகிய இந்த முதல் வேளையில் இருந்து நீங்கள் தான் இந்த கோவிலை நிர்வகிக்க வேண்டும் என தாய் உத்திரவிட்டாள் நாங்கள் மலைத்தோம் அந்த தாயானவள் பயம் வேண்டாம் உடன் நானிருப்பேன் என வாக்களித்தாள். அந்த தாயானவள் கேசவசாஸ்திரி (தலைமை சாஸ்திரி கும்பாபிஷேகக்குழு) உடலிலிருந்து கொண்டே பாம்பைபோல கருவறையிலிருந்து நெகளிந்து கொண்டு 200 அடி தூரத்தில் உள்ள திருக்கோவிலின் நேர் எதிரே நெளிந்து சென்று புற்றின் மேலே படர்ந்தார்.

மகனே, இன்று அந்த கும்பாரிஷேகத்திற்கு நான்கு வருடங்கள் குழந்தையில்லாமல் நெல்லூர், நெல்லுக்குப்பம்மனை வேண்டி பிறந்து நெல்லுக்குப்பம்மா என பெயரிடப்பட்டு 14 வயது சுமாருள்ள பெண் குழந்தை அன்னையை வேண்டி வந்துள்ளாள் அவளை கூப்பிடு என சொன்னாள் செயலாளராகிய ராஜு மைக்கில் அழைப்பு விடுத்தார் ஓர் பத்து நிமிடங்களில் அதே பெயர் உள்ள நான்கு வருடம் குழந்தை இல்லாமல் அன்னையை வேண்டிய பிறகு பிறந்த பெண் குழந்தை வந்து நின்றாள் அந்த தாய் அவளுக்கு அருள் தந்தாள். அந்த புற்றினிடத்தே இருந்து தாயானவள் இந்த கோவிலில் அருள்வாக்கு நிரந்தரம் ஒவ்வொரு வாக்கும் பலிக்கும் என சத்தியவாக்காக சொன்னாள் அந்தவாக்கு இன்றும் தொடர்ந்து நடைபெறுகின்றது. கும்பாபிஷேக மிகச் சிறப்பாகவும் அதில் அன்னதானம் மிக மிகச் சிறப்பாகவும்  நடைபெற்று நமது அன்னை மக்களுக்கு அருள் வாரி வழங்கினார்கள்.

  பிரதி வாரம் செவ்வாய்கிழமை அருள்வாக்கு நடைபெறும் மேலும் படிக்கWay