அருள்மிகு ஸ்ரீ நெல்லுக்குப்பம்மன் வரலாறுகப்பேலார் குல மக்கள் நாட்டில் பல பாகங்களில் வாழ்ந்தாலும் திண்டுக்கல் மாவட்ட கன்னிவாடியை தலைமையிடமாக (மடமனை) கொண்டு வாழ்ந்து வந்தனர். அந்த காலகட்டத்தில் ஒவ்வொரு குலங்களையும் காக்க ஆதிசக்தியாககிய பெட்டது சவுண்டம்மன் பல அவதாரங்கள் எடுத்தாள். அந்த அவதாரத்தில் கன்னிவாடி மடமனை (தலைமையில்) கப்பேலார்  குலமக்களை காக்க தோன்றியவள், அருள்மிகு ஸ்ரீ நெல்லுக்குப்பம்மன் என்பது ஓர் காரணப்பெயராகும்.

ஆதிகாலத்தில் நம் முன்னோர்கள் நெல்லூரில் வயல்வெளிக்கு நடுவில் வேப்பமரங்கள் சூழ தென்னை சோலை நடுவே அமைந்த நெல்வயல் மத்தியில் ஸ்ரீ நெல்லுக்குப்பம்மன் சிறிய அளவில் கோயில் கட்டி ஆறு கால பூஜை நடத்தி வந்தனர்.

ஆங்கிலேயர் படையெடுப்பு நடைபெற்ற சமயம் ஆங்கிலேயர்கள் பல ஊர் கோயில்களையும், சுவாமி விக்ரகங்களையும் சேதப்படுத்திவந்தனர். அதை கேள்விப்பட்ட நம் முன்னோர்கள் ஸ்ரீ நெல்லுக்குப்பம்மனை (விக்ரகத்தை) எடுத்து வயல் வெளியில் குப்பை குழிக்குள் மறைத்து வைத்து சுரங்க வாயிலாக சென்று பூஜைகள் நடத்தி வந்துள்ளனர். மேலே குப்பை மேடாகவும் உள்ளே கோயில் அமைத்தும் இருந்தனர். கோயிலை சுற்றி ஓடையில் வற்றாமல் நீர் ஓடிக்கொண்டு இருக்கும். அப்போதே கோவில் ஸ்தானிகர் வீட்டிலிருந்து அம்மனுக்கு வேண்டிய நைவேத்திய பூஜை பொருட்களை போழைமுடியில் வைத்து நீரோடையில் அனுப்பி வைப்பார். குப்பைமேடு உள்ள பகுதிக்கு வரும்போது பூசாரியார் அந்த நைவேத்திய பொருட்களை எடுத்து அம்மனுக்கு பேழை மூடியில் வைத்து நீரோடையில் விடுவார். அந்த பூஜை பொருட்களை தாங்கிய பேழைமூடி நீரின் நீரோட்டத்தின் எதிர் திசையில் சென்று கோவில் ஸ்தானிகர் (நம் முன்னோர்) வீட்டு பகுதிக்கு செல்லும் அவர்களும் அந்த அருட்பிரசாதங்களை எடுத்துச் செல்வர் இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு நாளும் தொடர்ந்து நடந்து வந்தது. கால சுழற்ச்சியில் பிழைக்க வேலை தேடியும் ஆங்கில படையெடுப்பின் கெடுபிடிகளாலும் பலர் பல இடங்களுக்கு சென்றனர். நாள்படி சுவாமி வைத்தவர்கள் இடம் மறந்து மறைந்தனர்.

நமது கப்பேலார் குல முதாதையர்கள் கன்னிவாடி அருகில் குய்யவநாய்க்கன்பட்டியில் மலையடிவாரத்தில் ஒய்யாரமாக வேப்பமர நிழலில் நான்கு கரங்களுடன் நின்ற நிலையில் அருளாட்சி செய்து வந்த பெட்டத்து சவுண்டம்மனை வழிபட்டுவந்தனர்.

ஒரு சமயம் நமது குல மக்கள் பெட்டத்து சவுண்டம்மனுக்கு அபிஷேகம் செய்து, அலங்காரம் செய்து, பொங்கலிட்டு பூஜித்தனர் அப்போது அருள்வாக்காக அந்த பெட்டத்து சவுண்டம்மதேவி அங்கிருந்த நமது கப்பேலார் குல பெரியவர்களிடம் அன்பு குழந்தைகளே நீங்கள் வழிபடவும் உங்களை காக்க வென்றே உதித்த தாய் இப்போது திண்டுக்கல் மாவட்டம் சித்தயன் கோட்டை அருகில் உள்ள சித்தரேவு என்கின்ற பகுதியில் உள்ள நெல்லூர் என்ற வயல்வெளியுல் தென்னை மரதோப்பும் உள்ள பச்சை பசேலென்ற பகுதியில் நெல்வயல்களுக்கு நடுவே நெல்வயலில் சேதாரமாகும் குப்பைகளை போட என பலநூறு வருடங்களுக்கு முன்பு தோண்டப்பட்ட குழி குப்பை கொட்டப்பட்டு மூடியநிலையில் அதன் உள்ளே எட்டு கரங்களுடன் ஆக்ரோஷ நிலையில் முயலகனை வதம் செய்த கோலத்துடன் விக்ரக வடிவமாக இருக்கின்றாள். நீங்கள் சென்று அவளை எடுத்து கோவில் கட்டி வணங்குங்கள் என ஆசிர்வதித்தாள்.

அருள் மிகு பெட்டத்து சவுண்டம்மன் ஆசிர்வதித்து கூறியபடி நம் குல முன்னோர்கள் நெல்லூர் சென்று வயல் வெளியில் குப்பை குழியில் தேட அங்கே எட்டுகரங்களுடன் முயலகனை காலடியிலிட்டு வதம் செய்யும் விதமாக ஆக்ரோஷமாக கல்விக்ரகவடிவில் நமது குலதெய்வம் அருள்மிகு ஸ்ரீ நெல்லுக்குப்பம்மன் காட்சி கொடுத்தாள். இப்போதைய பூசாரியார் திரு மகாலிங்கம் அவர்களுடைய தந்தையார் திரு அண்ணாமலை செட்டியார் அந்த விக்ரகத்தை எடுத்து நெல்லூர் நெல்வயல் நடுவில் அற்புதமாக கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்து வழிபட்டு வந்தனர்.

     
மனித நடமாட்டம் அதிகமில்லாத மேற்கு தொடர்ச்சிமலையின் தென்கிழக்குபகுதியில் அமைந்துள்ள மேற்கண்ட நெல்லூரில் வயல் வெளியின் மத்தியில் நமது குலதேவி அமர்ந்து அருளாட்சிபுரிய ஆரம்பித்தாள் அமைதியான அந்த சூழல் காரணமாக கண்ணுக்கு தெரியாத சூட்சம சக்திகள், தேவர்கள் ரிஷிகள், முனிவர்கள், மகான்கள் என பலரும் வந்து தேவியிடம் வேண்டியதை எளிதாக பெற்றுச் சென்று கொண்டுள்ளனர். நமது அருள்மிகு ஸ்ரீ நெல்லுகுப்பம்மன் கோயில் கருவரையில் அருள்மிகு ஸ்ரீ நெல்லுக்குப்பம்மன் வடக்குமுகமாக அமர்ந்துள்ளாள்.

அர்த்தமண்டபத்தில் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ இராமலிங்கேஸ்வரர், ஸ்ரீ பாலமுருகன் உள்ளனர். அர்த்தமண்டப நுழைவு வாயில் துவாரசக்திகள் உள்ளனர். முன்புற வாசலில் பகுதியில் சிம்மவாகனமும் பலிபீடம் திரிசூலமும் உள்ளது. முன்புற வாசலில் திருக்கோயிலின் காம்பவுண்டுக்கு உள்ளே மேற்கு பகுதியில் கன்னிமார்களும் பேச்சி ஆச்சி தேவியரும் உள்ளனர். திருக்கோயிலில் மேற்கு பகுதியில் கருப்பராயர் ஆலமரத்தடியில் சூலவடிவமாக உள்ளார். திருக்கோயிலில் காம்பௌண்டுக்குள்ளே கருவரைக்கு பின்புறம் நாகம்மன் (புற்று) குடி கொண்டுள்ளார்.

இதையறியாத நம் முன்னோர்கள் பிழைப்பு தேடி ஒவ்வொரு குழக்களாக நாட்டின் பல பாகங்களுக்கும் சென்றனர். இருந்தாலும் மறவாமல் ஒவ்வொரு சிவராத்திரியன்றும் எங்கிருந்தாலும் நெல்லூர் வந்து நம் குல தேவியை பூஜித்து வந்தனர். நெல்லூரிலிருந்து வேலைநிமித்தம் பல்வேறு பகுதிகளுக்கு சென்றவர்களில் ஒருசிலர் அம்மனை வேண்டி அவரவர்கள் ஊர்களில் திருக்கோயில் கட்டி அனுதினமும் பூஜித்து வருகின்றனர்.

  பிரதி வாரம் செவ்வாய்கிழமை அருள்வாக்கு நடைபெறும் மேலும் படிக்கWay