தேவலன் வரலாறுஅகிலலோக நாயகன் ஆதிசிவனும் ஆதிபராசக்தியும், பிரபஞ்சங்களையும் அகிலலோகங்களையும், அதில் உள்ள ஜீவராசிகளையும் ஜனிக்கவைத்து, வாழவைத்து, தன்னடிசேர்க்க வைக்கின்றனர். ஒவ்வொரு ஜீவராசிக்கும் ஜனனமும், வாழ்க்கையும், மறைதலும் வேறுபட்டாலும் எல்லாமே ஒழுங்குமுறையாக நடைபெறுகின்றது.

தேவலோகத்தில் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும், சித்தர்களுக்கும், அஷ்டதிக்பாலர்களுக்கும், நவகிரகங்களுக்கும் அணிய அங்கிதனை தயார் செய்து கொடுக்க ஆதிசிவனால் உருவாக்கப்பட்டவர் (தேவர்களுக்கு, அங்கி கொடுத்ததனால்) தேவாங்கனானார்.

பூலோகத்தில் அனைவரும் தோலினாலும், இலைகளாலும் உடலை மறைக்க உடை தரித்திருந்த காலத்தில், ஆதிசிவனார் தேவாங்கனை அழைத்து தேவலோகத்தில் அங்கி வழங்கியது போல, பூலோகம் சென்று மக்களுக்கு நூலாலான ஆடைகளை தயார் செய்து கொடு என ஆசிர்வதித்து சூரியனின் தங்கை தேவதத்தையை மணம் முடித்து கொடுத்து இருவரையும் வாழ்த்தி அனுப்பி வைத்தார்.

ஆதிசிவனின் ஆணையை ஏற்று தேவலனும், தேவதத்தையுடன் பூலோகம் வரும் வழியில் ஆடை நெய்ய நூல் வேண்டி ஸ்ரீ நாரயணனிடம் சென்று வேண்ட, ஸ்ரீ நாரயணனும் தன் நாபிகமல தாமரையின் தண்டிலிருந்து நூல் எடுத்து தேவலனிடம் கொடுத்து ஆசிர்வதித்து பூலோகம் அனுப்பி வைத்தனர்.

ஸ்ரீ நாரயணன் கொடுத்த நூலுடன் வந்த தேவாங்கனை அசுரர்கள் முனிவர் வேடமணிந்து நயவஞ்சகமாக தங்கள் குடில்களுக்கு அழைத்து சென்று தங்களுக்கு உடை தயார் செய்ய ஏற்பாடு செய்கின்றனர். தேவலன் சூழ்ச்சிதனை புரிந்து கொண்டு மறுக்கவே ஸ்ரீ நாராயணன் தந்த நூலை பிடுங்கி கொள்ள அசுரர்கள் எத்தனிக்கவே தேவாங்கன் ஸ்ரீ நாராயணனை அழைக்க, அசுரர்களுக்கு தன்னாலோ தன்படைகளினாலோ அழிவில்லை என வரமளித்திருந்ததால் அவரால் அசுரர்களை ஒன்றும் செய்ய இயலவில்லை.

ஏதும் அறியாமல் பறிதவித்த தேவாங்களை காக்க ஆதிசிவனாரின் உத்தரவின் பேரிலும், தேவாங்கன் மீதிருந்த அன்பினாலும் ஆயிரம் கோடி சூரியனின் பிரகாசம் உடைய சூடாமணியை  கொண்ட கிரிடத்தை தலையில் அணிந்து கையில் சூலாயுதத்துடன் சிங்க வாகனமேறி வந்தவள் ஸ்ரீ ராமலிங்க (சௌடாம்பிகை) சூடாமணி தேவி.

தேவலனும் அம்மா என கதறிவேண்ட தேவியானவள் அசுரர்களை போரிட்டு வென்றாள் அசுரர்களின் ரத்தங்கள் பல வண்ணங்களில் இருந்தன தேவியும், தேவலனிடம் நூல்களை வாங்கி அசுரர்களின் பலவண்ண ரத்தங்களில் நனைத்து பல வண்ண நூல்களாக தேவலனிடம் கொடுத்து தேவதத்தையையும் அழைத்து இருவரும் பூலோகம் சென்று பூலோகத்தில் மக்களுக்கு ஆடைகளை நெய்து கொடுங்கள் என ஆசிர்வதித்தனர்.

தேவி ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி, தேவலன், தேவதத்தை மூலம் பிறக்கும் குழந்தைகள் தேவாங்கர் எனவும் அவர்களை காக்க என்றும் நான் முன் வருவேன், உடன் வருவேன் என ஆசிர்வதித்து அனுப்பி வைத்தாள்.

தேவலனும், தேவதத்தையும் பூலோகம் வந்து வாழ ஆரம்பித்து குழந்தைகள் பிறக்க வளர்ந்து, சந்ததி உருவானது. அந்த சந்ததியிலே மக்கள் பிறக்க வாழ்க்கையை ஒழுங்குபடுத்த என 10,000 குலம் உருவாக்கப்பட்டு அவற்றை வழிநடத்த 700 கோத்திர ரிஷிகள் வந்தனர்.

ஒவ்வொரு கோத்திர ரிஷிகளுக்கும் ஒரு சில குலங்கள் என பிரிக்கப்பட்டு வாழ்க்கை நெரிபடுத்தப்பட்டது.

அப்படியாக வந்த குலங்களில் கப்பேலார் குலம் சிறந்து விளங்கியது அதற்கு அதனை வழிநடத்திய தேவலனனின் 16-வது பிறவியாக வந்துதித்த வரதந்து மஹரிஷியே காரணம். அவர்தம் துணைவியார் அமர்ஸீலிதாயார்.

  பிரதி வாரம் செவ்வாய்கிழமை அருள்வாக்கு நடைபெறும் மேலும் படிக்கWay